விஷம் குடித்த தொழிலாளி சாவு

விஷம் குடித்த தொழிலாளி உயிரிழந்தார்
விஷம் குடித்த தொழிலாளி சாவு
Published on

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள கணக்கப்பிள்ளையூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 47). கூலித் தாழிலாளி. இவரது மனைவி செல்வி (40). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த மாணிக்கம் சம்பவத்தன்று பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதையறிந்த உறவினர்கள் அவரை கரூர் அரசு மருத்துவமனையில் சோத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com