உத்தனப்பள்ளி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

உத்தனப்பள்ளி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.
உத்தனப்பள்ளி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி அருகே உள்ள சாமனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாக்கப்பா (வயது 50). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள மரத்தில் ஏறி இலைகளை பறிக்க முயன்றார். அப்போது அவர் மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை, பொதுமக்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாக்கப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com