ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

கொடைரோடு அருகே ரெயிலில் அடிபட்டு தாழிலாளி பலியானார்.
ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
Published on

கொடைரோடு:

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே மாவுத்தன்பட்டியை சேர்ந்த நடராஜன் மகன் செல்வம் (வயது 31). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவு செல்வம் கொடைரோடு அருகே தர்மாபுரி பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி சென்ற ரெயில் ஒன்று செல்வம் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கொடைரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் செல்வத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com