வாகனம் மோதி தொழிலாளி சாவு

கன்னியகோவில் அடுத்த வாக்கால்ஓடை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தொழிலாளி வாகனம் மோதி இறந்தார்.
வாகனம் மோதி தொழிலாளி சாவு
Published on

பாகூர்

கன்னியகோவில் அடுத்த வாக்கால்ஓடை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 60). கூலித்தொழிலாளி. நேற்று கடலூர்-பாண்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com