

கீரனூர்,
பொன்னமராவதி அடுத்துள்ள வளையப்பட்டியை சேர்ந்தவர் ராஜா (வயது 30). தொழிலாளியான இவர் குன்றாண்டார் கோவில் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவுக்காக கோபுரத்தில் ஏறி மின் விளக்குகளை பொருத்தி விட்டு கீழே இறங்கும் போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதில், படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து உடையாளிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சுமையா பானு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.