தலையில் கல் விழுந்ததில் தொழிலாளி சாவு

தலையில் கல் விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
தலையில் கல் விழுந்ததில் தொழிலாளி சாவு
Published on

உத்திரமேரூர்,

சென்னை திரிசூலத்தை சேர்ந்தவர் குழந்தைவேலு (வயது 58). இவர் உத்தரமேரூர் ஒன்றியம் சிறுதாமூர் என்னும் ஊரில் உள்ள கல் அரைக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென அவரது தலையில் பெரிய கல் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த குழந்தைவேலுவை உடனடியாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாலவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரோசையா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com