வட்டார கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 26 வட்டார கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வட்டார கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் 26 வட்டார கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிட மாறுதல்

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து ஒரே இடத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு இணையதளம் மூலம் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து கீழ்கண்ட பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வத்திராயிருப்பு பகுதியில் பணிபுரிந்த முத்துராமலிங்கம் ராஜபாளையத்திற்கும், விருதுநகரில் பணிபுரிந்த சுந்தரி திருச்சுழிக்கும், வத்திராயிருப்பில் பணியாற்றிய செல்வலட்சுமி ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகாசி

ஸ்ரீவில்லிபுத்தூரில் பணியாற்றிய சீனிவாசன் வத்திராயிருப்புக்கும், விருதுநகரில் பணிபுரிந்த செல்வக்குமார் அருப்புக்கோட்டைக்கும், சிவகாசியில் பணியாற்றிய மலர்கொடி ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல் சாத்தூரில் பணிபுரிந்த சையத் அலி பாத்திமா அருப்புக்கோட்டைக்கும், அருப்புக் கோட்டையில் பணியாற்றிய அனுராதா ராஜபாளையத்துக்கும், சிவகாசியில் பணிபுரிந்த லோகநாதன் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பஞ்சாயத்துக்கும், சிவகாசியில் பணியாற்றிய கருப்பசாமி விருதுநகருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணிபுரிந்த விஜயலட்சுமி ராஜபாளையத்திற்கும், அருப்புக்கோட்டையில் பணிபுரிந்த சரவணகுமார் திருச்சுழிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

கலந்தாய்வு

மேலும் சாத்தூரில் பணியாற்றிய செண்பகக்கனி வெம்பக்கோட்டைக்கும், காரியாபட்டியில் பணியாற்றிய ராமலட்சுமி விருதுநகருக்கும், ராஜபாளையத்தில் பணியாற்றிய மணிமேகலை விருதுநகருக்கும் மாற்றப்பட்டனர்.

வெம்பக்கோட்டையில் பணிபுரிந்த வெங்கடசாமி சாத்தூருக்கும், ராஜபாளையத்தில் பணிபுரிந்த முருகன் சாத்தூருக்கும், நரிக்குடியில் பணிபுரிந்த சிவகுமார் காரியாபட்டிக்கும், விருதுநகரில் பணிபுரிந்த அலமேலம்மாள் நரிக்குடி பகுதிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த இடமாறுதல் கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி முன்னிலையில் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com