உலக புகைப்பட தினம்

இன்றைய நாளில், டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி, தாய்மார்கள் தினசரி தங்கள் குழந்தைகளின் செய்கைகளையும், குறும்பு நடவடிக்கைகளையும் இனிமையான நினைவுகளாக சேகரித்து வருகிறார்கள்.
உலக புகைப்பட தினம்
Published on

வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பல உணர்வுகளை, ஒரு புகைப்படம் எளிதாக உணர்த்திவிடும். பல்வேறு விதங்களில், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புகைப்படங்கள், நமது வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை காலத்துக்கும் நினைவில் இருக்கும்படி பதிவு செய்கின்றன. அன்று முதல் இன்று வரை பெண்களும் புகைப்படக்கலையில் தடம் பதித்து வருகிறார்கள்.

இன்றைய நாளில், டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்தி, தாய்மார்கள் தினசரி தங்கள் குழந்தைகளின் செய்கைகளையும், குறும்பு நடவடிக்கைகளையும் இனிமையான நினைவுகளாக சேகரித்து வருகிறார்கள்.

கடந்த நூற்றாண்டுகளில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் உலக வரலாற்றையே மாற்றியது. அந்த வகையில், ஒரு நிகழ்வின் காலத்தை நிலை நிறுத்திவைக்க உதவும் புகைப்படங்களின் உன்னதத்தையும், புகைப்படக் கலைஞர்களின் கலை மற்றும் திறனையும் பெருமைப்படுத்தும் விதமாகவும், பல சகாப்தங்களாக உலகைக் கவர்ந்த புகைப்படக் கலையை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி 'உலக புகைப்பட தினம்' கொண்டாடப்படுகிறது.

கேமரா அப்ஸ்குரா, நெகட்டிவ் முறை, சில்வர் காப்பர் பிளேட், பேப்பர் பிலிம், டிஜிட்டல் கேமரா, ஸ்மார்ட்போன் என புகைப்படக்கலையில் பல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்பட்டுள்ளன. இருந்தாலும், இன்றும் சிறந்த புகைப்படமாக விளங்குவது, நமது பாட்டிமார்கள் காலம் காலமாக பொக்கிஷமாக காத்துவந்த, துருப்பிடித்த இரும்புப் பெட்டிக்குள், கறை படிந்த கண்ணாடிக்குள், கரையான் அரித்த அட்டையில் ஒட்டியிருக்கும் மறக்க முடியாத நினைவுகளை அளித்த அன்புக்குரியவரின் கருப்பு வெள்ளை புகைப்படம் தான். ஒளியின் எழுத்துக்களைக் கொண்டு, வாழ்வின் நினைவுப் பக்கங்களில் எழுதுவோம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com