கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் ரைட்டர்

பா.இரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி இருக்கும் ரைட்டர் திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாக இருக்கிறது.
கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் ரைட்டர்
Published on

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா இரஞ்சித் தொடர்ந்து பல படங்களை மக்களுக்கு படைத்து வருகிறார். தற்போது அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் ரைட்டர் படத்தினை தயாரித்திருக்கிறார்.

இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. காவல்துறையில் எழுத்தர் (ரைட்டர்) பணிபுரியும் கதாபாத்திரமாக தோன்றுகிறார் சமுத்திரக்கனி. காவல்நிலையத்தில் ரைட்டர்களின் வலியை அழுத்தமாக இயக்குனர் பதிவு செய்திருப்பதை படத்தின் டிரைலர் மூலம் காண முடிந்தது.

போலீஸ் பத்தி அவதூறு பரப்பவே ஒரு கூட்டம் இருக்கு... காக்கிகளின் சாம்ராஜ்யத்தில் தமிழகம்; மலிந்துக்கிடக்கும் மனித உரிமை உள்ளிட்ட பல வசனங்கள் தற்கால வாழ்வியலில் நடக்கும் ஒரு வலியை வெளிக்கொண்டுவரும் படமாக ரைட்டர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரைட்டர் திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக இம்மாதம் 24ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com