அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய யஷ்

கேஜிஎஃப் படத்தில் நடித்து பல ரசிகர்களை கவர்ந்த யஷின் புதிய தோற்றம், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிய யஷ்
Published on

2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் படத்தில் நடித்து பிரபலமானவர் கன்னட நடிகர் யஷ். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் தற்போது கேஜிஎஃப்- 2 வெளியாகியுள்ளது.

இந்த படமும் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக தனது புதிய படத்துக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் யஷ். அந்தவகையில் அடுத்து நடிக்கும் படத்துக்காக தனது நீண்ட தாடி, தலைமுடியை ட்ரீம் செய்து ஸ்மார்ட்டாக மாறி இருக்கிறார்.

6 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய அளவில் வளர்த்து வைத்திருந்த தன் தலை முடி, தாடியை குறைத்து புதிய கெட்டப்புக்கு மாறி உள்ளார். யஷின் இந்த தோற்றம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com