2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பட டிரெய்லர்கள்...முதல் இடத்தில் எந்த படம் தெரியுமா?


Do you know which Tamil film trailer received the most views this year?
x

பெரிய நட்சத்திரங்களின் படங்களே இதில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

சென்னை,

2025-ல் வெளியான திரைப்படங்களில் பல படங்களின் டிரெய்லர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில் அதிக பார்வைகளைப் பெற்ற டிரெய்லர்கள் பெரிய நட்சத்திரங்களின் படங்களே.

அதிலும், நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டிரெய்லர் யூடியூபில் 3.9 கோடி பார்வைகளைப் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

2-வது இடத்தில் கமல்ஹாசனின் தக் லைப் உள்ளது. சிம்பு, திரிஷா நடித்த இந்த படத்தின் டிரெய்லர் யூடியூபில் 3.5 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

அடுத்த இடத்தில் ரஜினிகாந்தின் கூலி உள்ளது. இது யூடியூபில் 2.8 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. இதில், நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

4-வது இடத்தில் உள்ளது சூர்யாவின் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தின் டிரெய்லர் யூடியூபில் 2.4 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனின் டிராகன் உள்ளது. இது யூடியூபில் 2.1 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது.

1 More update

Next Story