ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. சமூகநல இயக்குனர் அறிவிப்பின்படி இத்திட்டத்தில் மாவட்ட அளவில் கூடுதலாக 6 நபர்களை நியனம் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த சேவை மைய வழக்கு ஆலோசகர் (மகளிர் மட்டும்) பணியிடங்கள் 4 காலியாக உள்ளது. இதற்கான கல்வி தகுதி முதுகலை சமூகப்பணி, சட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆலோசனை மற்றும் மறுவாழ்வு அளித்தல் சம்பந்தமான பணியில் 3 வருடம் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான மாத ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். பாதுகாவலர் (மகளிர் மட்டும்) 1 காலிப்பணியிடம் உள்ளது. இப்பணிக்கு 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். பல்நோக்கு உதவியாளர் (மகளிர் மட்டும்) பணியிடம் 1 உள்ளது. இப்பணிக்கு 10-ம் வகுப்பு முடித்து, மைய பராமரிப்பு வேலை மற்றும் சமையல் தெரிந்திருக்க வேண்டும். மேலும் 3 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.6,400 வழங்கப்படும். இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானது. பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவார்கள். எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணபிக்கலாம். மேற்கண்ட தகவல் கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com