பிடிச்சத பண்ணா லட்சம் பேருக்கு சூப்பர்ஸ்டார் ஆகலாம்.. வைரலாகும் அன்னபூரணி டிரைலர்

அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். நயன்தாராவின் 75-வது படமாக அன்னபூரணி உருவாகி இருக்கிறது.
பிடிச்சத பண்ணா லட்சம் பேருக்கு சூப்பர்ஸ்டார் ஆகலாம்.. வைரலாகும் அன்னபூரணி டிரைலர்
Published on

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா தற்போது இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் அன்னபூரணி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் தலைப்பு மற்றும் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

நயன்தாராவின் 75-வது படமாக உருவாகி இருக்கும் அன்னபூரணி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படம் டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.

சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com