பிரபல இளம் வீராங்கனை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரபல இளம் வீராங்கனை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
Published on

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம் துப்பாக்கி சுடும் வீராங்கனை குஷ் சீரத் கவுர் சந்து ( வயது 17). இவர் தனது பரித்கோட் இல்லத்தில் நேற்று காலை தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கவுர் சந்து தேசிய அளவிலான போட்டிகளில் பலபதக்கங்களை வென்றுள்ளார். ஆனால் சமீபத்தில் முடிவடைந்த 64-வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் அவர் தோல்வி அடைந்தார். இதனால் அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com