10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி


10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி
x

எய்ம்ஸ் சார்பில் போபாலில் உள்ள மருத்துவ மையத்தில் பல்வேறு பணி பிரிவுகளில் 233 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) சார்பில் போபாலில் உள்ள மருத்துவ மையத்தில் மல்டி டாஸ்கிங் பணியாளர் (40), ஸ்டோர் கீப்பர் மற்றும் கிளார்க் (85), கீழ் நிலை கிளார்க் (32), ஸ்டெனோகிராபர் (34), டிரைவர் (16) உள்பட பல்வேறு பணி பிரிவுகளில் 233 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பதவிகளின் தன்மைக்கேற்ப 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு போன்றவை கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். சில பதவிகளுக்கு 27 வயது, 30 வயது, 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வும் உண்டு. கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-10-2023.

வின்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://aiimsbhopal.edu.in/ என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.


Next Story
  • chat