கார்பனை உரமாக்கும் எந்திரம்..!


கார்பனை உரமாக்கும் எந்திரம்..!
x

கார்பனை திடப்பொருளாக மாற்றி, தக்காளி, வெள்ளரி ஆகிய செடிகளுக்கு உரமாக பயன்படுத்த முடியும் என்பது புதிய செய்தி.

சுவிட்சர்லாந்தின் கிளைம்வொர்க்ஸ் நிறுவனம், காற்றிலுள்ள கார்பனை நீக்கி காற்றை சுத்திகரிக்கிறது. ஓராண்டிற்கு 900 டன்கள் கார்பனை இந்நிறுவனத்தின் புதிய காற்று சுத்திகரிப்பு எந்திரம் நீக்கி சுற்றுச்சூழலைக் காக்கிறது என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

"இந்த எந்திரத்தில் கார்பனை உள்ளிழுக்கும் 6 மெஷின்கள் உண்டு. விசிறிகள் காற்றை உள்ளிழுத்து சேகரிப்பான்களுக்கு கொண்டு செல்ல அங்குள்ள ஸ்பாஞ்ச் போன்ற பில்டர்கள் அதனை சுத்திகரிக்கின்றன. பின் 100 டிகிரி செல்சியஸில் உள்ளிழுக்கப்பட்ட காற்று சூடுபடுத்தப்பட்டு தூய்மை செய்யப்படுகிறது" என்கிறார்கள் இதன் கண்டுபிடிப்பாளர்களான கிறிஸ்டோப் கெபால்ட் மற்றும் ஜென் வர்ஸ்பேக்கர்.

உள்ளிழுக்கப்பட்ட கார்பனை திடப்பொருளாக மாற்றி, தக்காளி, வெள்ளரி ஆகிய செடிகளுக்கு உரமாக பயன்படுத்த முடியும் என்பது புதிய செய்தி. இதனை குளிர்பானங்கள் மற்றும் கரிம எரிபொருட்களுக்கும் விரிவாக்க, முயற்சிகளை செய்து வருகிறார்கள் இவ்விரு ஆராய்ச்சியாளர்கள்.

2025-ம் ஆண்டுக்குள் ஒரு சதவிகித மாசுபாட்டையேனும் குறைப்பதே ஆராய்ச்சியாளர்கள் கெபால்ட் மற்றும் வர்ஸ்பேக்கர் ஆகியோரின் குறிக்கோள். இதற்கு தேவைப்படும் மெஷின்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரம்.


Next Story
  • chat