வைராலஜி படிப்பு


வைராலஜி படிப்பு
x

தொழில்நுட்ப வளர்ச்சியில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. அதே நேரத்தில் உலகில் புதிய, புதிய நோய்களும் பரவி வருகின்றன. காரணம் கண்டுபிடிக்க முடியாத வினோதமான நோய்களை கண்டுபிடிப்பதற்காக நிபுணர்களின் தேவையும் ஏற்படுகிறது. வைரஸ் நோய்களை பற்றிய படிப்புதான் இதற்கு தீர்வு. அத்தகைய வைரஸ்களை பற்றிய படிப்புகளை இங்கே பார்ப்போம்.

எம்.பி.பி.எஸ்., லைப் சயின்ஸ் பாடத்தில் பி.எஸ்சி., பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி அல்லது உயிரியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருந்தால் எம்.எஸ்சி., வைராலஜி படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம், நுழைவுத்தேர்வை எழுதுவது கட்டாயம், இளநிலைப் பட்டப்படிப்பு நிலையில், ஆய்வக அனுபவம் இருந்தால், கூடுதல் தகுதியாக எடுத்துக் கொள்ளப்படும்.

ஒருவரின் ஆர்வத்தைப் பொறுத்து, மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பார்மசூட்டிகல் நிறுவனங்கள், அரசு ஏஜென்சிகள், பேதாலஜி ஆய்வகங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணி வாய்ப்புகளைப் பெறலாம்.

வைராலஜி தொடர்பான படிப்புகளை மேற்கொள்ள மாணவர்கள் இனி மேல் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை. தற்போது இந்திய கல்வி நிறுவனங்களே உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குகின்றன என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி (புனே), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கம்யூனிகேபல் டிசீஸ் (டெல்லி), மணிபால் சென்டர் பார் வைரஸ் ரிசர்ச் (மணிபால்) ஆகியவை, வைராலஜி படிப்புகளை வழங்கும் பிரபலமான கல்வி நிறுவனங்கள்.


Next Story