இ.எஸ்.ஐ.சி நிறுவனத்தில் வேலை

தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.சி) சார்பில் நாடு முழுவதும் 1,129 பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இ.எஸ்.ஐ.சி நிறுவனத்தில் வேலை
Published on

தமிழகத்தை பொறுத்தவரை இ.சி.ஜி டெக்னீஷியன், ஜூனியர் ரேடியோகிராபர், ஓ.டி. உதவியாளர், மருந்தாளுனர் (அலோபதி, ஆயுர்வேதம்), ரேடியோ கிராபர், ஜூனியர் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் என 56 பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

12-ம் வகுப்பு கல்வி தகுதியுடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

30-10-2023 அன்றைய தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.டி. உதவியாளர், மருந்தாளுனர் (அலோபதி) பதவிகளுக்கு மட்டும் 32 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வு உண்டு. ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-10-2023. மேலும் விரிவான விவரங்களை https://www.esic.gov.in/recruitments என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com