ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

நெல்லையில் ஆற்றில் மூழ்கி வாலிபர் இறந்தார்.
ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
Published on

நெல்லை:

நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com