காயல்பட்டினத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

காயல்பட்டினத்தில் வாலிபர் தூக்கு போட்டி தற்கொலை செய்து கொண்டார்.
காயல்பட்டினத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
Published on

ஆறுமுகநேரி:

நேபாளம் நாட்டை சேர்ந்தவர் ராம் பகதூர் ஆஸாத். இவர் காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்து குடியேறிய இவர் கூர்க்கா வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகன் சுபாஷ், மூத்த மகள் லட்சுமி ஆகியோருக்கு திருமணம் ஆகி விட்டது. இளைய மகன் முருகன்(வயது24), மற்றொரு மகள் தூர்க்கா ஈஸ்வரி, ஆகியோருக்கு திருமணம் ஆகவில்லை. இதில் முருகன் சற்று மன நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். பல்வேறு இடங்களில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இவருக்கு மதுகுடிக்கும் பழக்கமும் இருந்துள்ளது.

இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களாக பெங்களூர் சென்று அங்கு வேலை பார்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மாலையில் காயல்பட்டினம் வந்துள்ளார். அப்போது அவர் மிகவும் சோர்வுடன் இருந்துள்ளார். தனது தங்கை தூர்க்கா ஈஸ்வரி விசாரித்த போது தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். தங்கை அவரை சமாதானம் செய்துள்ளார். வீட்டின் அருகேயுள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆறுமுகநேரி போலீசார் அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com