பொது இடத்தில் மது அருந்திய வாலிபர் கைது

கோட்டுச்சேரி அருகே பொது இடத்தில் மது அருந்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பொது இடத்தில் மது அருந்திய வாலிபர் கைது
Published on

கோட்டுச்சேரி

காரைக்கால் நகர போலீசார் அம்பேத்கர் வீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பொது இடத்தில் மது அருந்திய ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

 விசாரணையில் அவர் திருவாரூர் மாவட்டம் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த குமரன் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com