

விராலிமலை:
விராலிமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக விராலிமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விராலிமலை சோதனைச்சாவடி அருகே உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம், பிராட்டியூர் காளியம்மன் கோவிலை சேர்ந்த அய்யர் மகன் சந்தோஷ் (வயது 21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 8 கிராம் கொண்ட 20 கஞ்சா பொட்டலங்கள், மோட்டார் சைக்கிள், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.