

ஆற்காடு
ஆற்காடு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆற்காடு கிளைவ்பஜார் பகுதியில் உள்ள ஏரிக்கரையோரம் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஆற்காடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.