பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது

கால்லங்கோட்டில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்
பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

கொல்லங்கோடு,

கொல்லங்கோடு பகுதியில் நேற்று தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சனல்குமார் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளி வளாகம் முன்பு ஒரு வாலிபர் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து சோதனையிட்ட போது அவரிடம் ஒரு கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், அவர் அடைக்காகுழி பகுதியை சேர்ந்த அபிஜித் (வயது 26) என்பதும், கேரளாவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அபிஜித்தை போலீசார் கைது செய்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com