கஞ்சா விற்ற வாலிபர் கைது

களக்காடு அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள பத்மநேரியில் கஞ்சா விற்பனை நடப்பதாக களக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் பத்மநேரிக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது பிளாஸ்டிக் கவரில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் சிங்கிகுளம் நடுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சுரேஷ் (21) என்பதும், இவர் கேரளாவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com