கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on


கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் சிறப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் ஆம்பூரில் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்குச் சென்றனர்.

அப்போது போலீசாரை கண்டதும் ஒரு வாலிபர் ஓடினார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் ஆம்பூர் கஸ்பா.பி பகுதியைச் சேர்ந்த சரண் (வயது 21) என்றும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரை ஆம்பூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com