

சாயல்குடி,
சாயல்குடி பகுதியில் தொடரும் கஞ்சா விற்பனை நடைபெறுவதை தடுக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி சாயல்குடி இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் மற்றும் தலைமை காவலர்கள் வேல்முருகன், காத்தாலிங்கம் ஆகியோர் சாயல்குடி மூக்கையூர் சாலைப் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.அப்போது அந்தபகுதியில் வடக்கு மூக்கையூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலாஜி (வயது23) கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து இன்ஸ் பெக்டர் தமிழ்ச்செல்வன் வழக்குப்பதிவு பாலாஜியை கைது செய்ததுடன் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.