

சாயல்குடி,
சாயல்குடி அருகே கடற்கரை பகுதிகளில் சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன் தலைமையிலான போலீசார் டி.மாரியூர் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த டி.மாரியூர் கிராமத்தைச் சேர்ந்த சம்சுதீன் மகன் அஜ்மல் அலி (வயது33) என்பவரை சோதனை செய்ததில் அவர் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாயல்குடி போலீசார் அஜ்மல் அலியை கைது செய்து அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.