அரவிந்தர் ஆசிரம அச்சகத்தில் திருடிய வாலிபர் கைது

கடற்கரை சாலையில் உள்ள அரவிந்தர் ஆசிரம அச்சகத்தில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரவிந்தர் ஆசிரம அச்சகத்தில் திருடிய வாலிபர் கைது
Published on

புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை சாலையில் அரவிந்தர் ஆசிரமத்திற்கு சொந்தமான அச்சகம் உள்ளது. இந்த அச்சகத்தின் ஒரு பகுதியில் உள்ள அறையில் ஆசிரமவாசிகள் தங்கியுள்ளனர். இதில் பெண்கள் தங்கியிருந்த அறையில் இருந்து ரூ.3 ஆயிரம் திருடு போனது. இதுகுறித்து ஆசிரம அச்சக மேலாளர் சுவாதின் சட்டர்ஜி பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை திருடியது ரங்கப்பிள்ளை வீதியில் பிளாட்பாரத்தில் வசிக்கும் விஜய் (வயது 24) என்பது தெரியவந்தது. மது குடிப்பதற்காக பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com