மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
Published on

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த பெரியகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சூர்யா (வயது 20). இவர் கடந்த 7-ந் தேதி ஜோலார்பேட்டை அருகே வக்கணம்பட்டி பகுதியில் உள்ள டீக்கடை முன்பு தனது மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில் மோட்டார் சைக்கிள் மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலிசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் அதேப் பகுதியை சேர்ந்த செந்தாமரை கண்ணன் மகன் கவுதமன் (27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார்கைது செய்து, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com