சாட்சியை மிரட்டிய வாலிபர் கைது

போக்சோ வழக்கில் தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என சாட்சியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சாட்சியை மிரட்டிய வாலிபர் கைது
Published on

புதுச்சேரி

புதுச்சேரி சாரம் ஞானபிரகாசம் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் ஒரு போக்சோ வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் வெண்ணிலா நகரை சேர்ந்த சூர்யா (27) என்பவர் முக்கிய சாட்சியாவார்.

இந்த நிலையில் கார்த்திக் அவரை தொடர்பு கொண்டு தனக்கு எதிராக சாட்சி சொல்லக்கூடாது என செல்போன் மூலமாகவும், நேரிலும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com