

திருநெல்வேலி மாவட்டம், லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த இசக்கியப்பன் மகன் ஹரிகோபாலகிருஷ்ணன் (வயது 27) போக்சோ வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
அந்த வாலிபர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு வள்ளியூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுேகாளின் பேரில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் நேற்று ஹரிகோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.