தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

வில்லியனூர் அருகே தந்தையை இறந்த சோகத்தில் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன். அரிசி வியாபாரம் செய்து வந்தார். அவரது மகன் ராஜ்குமார் (வயது 30). இந்த நிலையில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திடீரென ரகுநாதன் இறந்தார். இதைத்தொடர்ந்து ராஜ்குமார் அரிசி வியாபாரத்தை பார்த்து வந்தார். தந்தையை இழந்த சோகத்தில் இருந்த ராஜ்குமார் கோர்க்காடு சுடுகாட்டு பகுதியில் உள்ள நெற்களத்தில் புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com