தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

ரெட்டியார்பாளையம் பகுதியில் மனஉளைச்சலில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

மூலக்குளம்

ரெட்டியார்பாளையம் மரியாள் நகரை சேர்ந்தவர் பிரமிளா (வயது 45). இவர், தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனது மகன் பிரவீனுடன் (22) தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் பீரவீன் கடந்த சில நாட்ளாக மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com