மும்ராவில் குண்டும், குழியுமான சாலையால் வாலிபர் பலி; மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தபோது லாரி மோதியது

தானே மும்ரா அருகே ஹாஜி மலங் பகுதியில் உள்ள குண்டும், குழியுமான சாலையால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தவறி விழுந்து லாரி மோதி பலியானார்
மும்ராவில் குண்டும், குழியுமான சாலையால் வாலிபர் பலி; மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்தபோது லாரி மோதியது
Published on

தானே, 

தானே மும்ரா அருகே ஹாஜி மலங் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது கனமழை காரணமாக சாலையில் குண்டும், குழியுமான கிடப்பதை கண்டு மோட்டார் சைக்கிளை ஒரு பக்கமாக திருப்பி உள்ளார். அப்போது சமநிலையை இழந்ததால் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அப்போது சிமெண்ட் கலவை லாரி ஒன்று சாலையில் விழுந்து கிடந்த வாலிபர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த உல்லாஸ்நகர் போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை கைது செய்தனர். பலியான வாலிபர் சூரஜ் கவாரி (வயது23) என தெரியவந்தது. மழையால் பல சாலைகள் குண்டும், குழியுமாக மாறி உள்ளன. இதுபோன்ற சாலை மும்ராவில் வாலிபர் ஒருவரின் உயிரை பறித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com