மது குடித்ததை கண்டித்த வாலிபர் கற்களால் தாக்கி கொலை: 3 மீன் வியாபாரிகள் கைது

கோவில்பட்டியில் ஒரு வாலிபரின் வீட்டின் அருகே மீன் வியாபாரிகள் 3 பேர் சேர்ந்து மது குடித்ததை கண்டித்ததால், ஆத்திரமடைந்த 3 பேரும் அந்த வாலிபரை செங்கற்களால் தாக்கி கொலை செய்தனர்.
மது குடித்ததை கண்டித்த வாலிபர் கற்களால் தாக்கி கொலை: 3 மீன் வியாபாரிகள் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 28), திருப்பூர் பகுதியில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆவல்நத்தம் பாலம் அருகே மர்ம நபர்களால் கற்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுப் பிணமாகக் கிடந்தார்.

இச்சம்பவம் குறித்து ேபாலீசார் மேற்கொண்ட விசாரணையில், அதே கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரிகளான வேல்முருகன்(35), அசோக்குமார்(28) மற்றும் முனியசாமி(35) ஆகியோருக்கும் கார்த்திக்கிற்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

மேலும் சம்பவத்தன்று மேற்சொன்ன 3 ேபரும் சேர்ந்து கார்த்திக் வீட்டின் அருகே மது குடித்துள்ளனர். அதை கார்த்திக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த 3 பேரும் அவரை செங்கற்களால் தாக்கிக் கொலை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தூத்துக்குடி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மேற்சொன்ன மீனவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com