சிங்கபெருமாள் கோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை; சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்

சிங்கபெருமாள் கோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
சிங்கபெருமாள் கோவிலில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை; சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
Published on

வண்டலூர்,

திருவாரூர் மாவட்டம் புதுப்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் பாலகுமாரன் (வயது 19), இவர் சிங்கபெருமாள் கோவிலில் தனது நண்பர்களுடன் அறையில் தங்கி ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலை முடித்து அறைக்கு வந்த அவரது நண்பர்கள் பாலகுமாரன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பாலகுமாரனின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக பாலகுமாரனின் தந்தை ராமச்சந்திரன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகுமாரன் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து அறையில் அவருடன் தங்கி இருந்த நண்பர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com