வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை

குலசேகரன்பட்டினம் அருகே வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்
வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை
Published on

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் அருகே உள்ள கல்லாமொழியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி அர்ச்சனா. இவர் கல்லாமொழியில் இட்லி கடை நடத்தி வருகிறார். இவர்களது 2-வது மகன் சுந்தரலிங்கம் (25). இவர் தினமும் இரவில் இட்லி கடையில் படுத்து தூங்குவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு சுந்தரலிங்கம் வீட்டில் சாப்பிட்டு விட்டு, இட்லி கடையில் தூங்க சென்றார். நேற்று காலையில் அர்ச்சனா கடையை திறப்பதற்கு சென்றார். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால், அவர் கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், ஜன்னலை திறந்து பார்த்தபோது சுந்தரலிங்கம் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். இதனால் அர்ச்சனா கதறி அழுதார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சுந்தரலிங்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com