துபாயில் யுவன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது.
துபாயில் யுவன்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யுவன் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் இசையமைப்பாளராக 25 ஆண்டு இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில் வருகிற மார்ச் 20ம் தேதி துபாயில் உள்ள ஜுபிலி பூங்காவில் நடைபெறவுள்ள 'துபாய் எக்ஸ்போ' கண்காட்சியில் பங்கேற்க உள்ளதாக டுவிட்டரில் யுவன் பதிவிட்டுள்ளார் .இதனால் யுவன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com