ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ- ஜியோவை சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
Published on

தாமரைக்குளம்,

அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவரும், ஜாக்டோ- ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளருமான சுப்ரமணியன் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து அரியலூர் அண்ணாசிலை அருகே ஜாக்டோ- ஜியோவை சேர்ந்தவர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சுப்ரமணியன் தாற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து வருகிற 12-ந் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை சென்னையில் நடத்துவோம் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் ஜாக்டோ- ஜியோ ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் தயாளன் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com