

அரக்கோணம்
பேச மறுத்த கள்ளக்காதலியை வெட்டிய ஆட்டே டிரைவர் ரெயில் முன் பாய்ந்து தற்காலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆட்டோ டிரைவர்
திருவள்ளூர் மாவட்டம் மணவூரை அடுத்த பாக சாலையை சேர்ந்தவர் ஏசு (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கலையரசி. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது வீட்டின் அருகே வசித்தவர் ஜான்சி (40). கணவனை இழந்த இவருடன் ஏசுவுக்கு ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அவர்கள் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ஏசுவுடன் பேசுவதை ஜான்சி தவிர்த்து வந்துள்ளார்.
வழிமறித்து தகராறு
கடந்த 2 நாட்களுக்கு முன் ஜான்சி, திருவாலங்காட்டில் உள்ள வங்கிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது எல்விபுரம்- பாகசாலை இடையே வந்தபோது ஏசு ஜான்சியை வழி மறித்து என்னுடன் ஏன் பேசுவதில்லை என கேட்டுள்ளார்.
இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏசு தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜான்சியை பலமாக வெட்டியுள்ளார். ஜான்சியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததை கண்ட ஏசு அங்கிருந்து தப்பி ஓடினார். பலத்த காயம் அடைந்த ஜான்சியை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை
ஏசுவை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் மணவூர் - செஞ்சி பனப்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் அடிபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஏசுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.