பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கான திறனாய்வு போட்டி 36 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன


பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கான திறனாய்வு போட்டி 36 படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன
x
தினத்தந்தி 27 Sept 2017 4:00 AM IST (Updated: 27 Sept 2017 3:04 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கான திறனாய்வு போட்டியில் 36 படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் தொழில்திறனை வெளிக்கொணரும் பொருட்டு திறனாய்வுபோட்டி கீழக்கணவாயில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் ஆகிய துறைகளிலிருந்து தாங்கள் உருவாக்கிய படைப்புகளை இளைஞர்கள் காட்சிக்காக வைத்தனர்.

பொறியியல் கல்லூரிகள், பல் தொழில்நுட்ப கல்லூரிகள் (பாலிடெக்னிக்), கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றோர், தொழிற்சாலைகளில் தொழிற் பழகுனர் களாய் பணிபுரிவோர் (அப்ரண்டிஸ்), இப்போட்டியில் பங்கேற்றனர்.

36 படைப்புகள்

சைக்கிள் இயங்கும் விதத்தை அடிப்படையாக கொண்டு நீர்நிலைகளில் உள்ள தண்ணீரை இரைத்து கொடுக்கும் எந்திரம் மற்றும் தேர்வு அறை உள்ளிட்ட செல்போன் தடை செய்யப்பட்ட பகுதியில் விதியை மீறி இயக்கப்படும் செல்போன்களை கண்காணிக்கும் கருவி, பழைய இரும்பு பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சொகுசு கார், இளநீரில் துவாரம் இடும் எந்திரம் உள்ளிட்ட 36 படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. பெரம்பலூர் மாவட்ட அரசு பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் வந்து கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர். இதில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மண்டல இணை இயக்குனர் டான்போஸ்கோ, கீழக்கணவாய் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் உதய சங்கர் உள்பட பேராசிரியர்கள் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். 
1 More update

Next Story