உலக நகரமாக மாறட்டும்

உலக மக்கள் தொகையில் மிக பெரும்பான்மையோர் ஆராதிக்கும் புனிதத் தலங்களில், அநேகமாக, முதல் இடம் வகிப்பது ‘ஜெருசலேம்’.
உலக நகரமாக மாறட்டும்
Published on: 

கிறிஸ்தவ, இஸ்லாமிய, யூத நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமல்ல; உலக நாட்டு மக்கள் அனைவரும் விரும்பி வந்து மன அமைதி பெறுகிற எல்லாருக்குமான புனித தலமாக ஜெருசலேம் திகழட்டும்.

இதுவே, நீடித்த அமைதிக்கான நல்ல வழி. இது மட்டுமே, மதத்தின் பெயரால் மனித குலம் பிளவுபடாமல், இணைந்து செயல்படத் துணை புரியும்.

இது ஒன்றும் சாத்தியம் இல்லாத கற்பனை அல்ல; விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தலைவர்கள் முயன்றால், உடனே கைகூடும். அதற்கு, இந்தத் தலைவர்களின் கைகள் கூட வேண்டும்.

நம்புவோம். மனித குலத்தை, சமாதானத்தை நோக்கிய ஒரு புதிய பயணத்துக்கு இட்டுச் செல்கிற வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இதை நல்கிற ஆற்றல் ஜெருசலேம் நகருக்கு மட்டுமே உண்டு.

-பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

X