கிளைகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேர்த்து வைத்திருக்க வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுரை

கிளைகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை சேர்த்து வைத்திருக்க வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுரை
x
தினத்தந்தி 14 Dec 2016 4:42 AM GMT (Updated: 14 Dec 2016 4:42 AM GMT)

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து சட்டவிரோத பண மாற்றம் நடந்து உள்ளது. இதனை மத்திய அரசின் விசாரணை முகமைகள் தீவிரமாக கண்காணிக்கிறது. விசாரணை முகமைகள் மேற்கொள்ளும் அதிரடி சோதனையில் கோடி, கோடியாக புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் கணக்கில் வராத பணம் தொடர்ந்து சிக்கிவருகிறது, கைது நடவடிக்கையையும் தொடர்கிறது. இதற்கிடையே வங்கிகளுக்கு மட்டும் அனுப்பப்பட்ட பணம் எப்படி அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களிடம் குவியும் நிலைக்கு சென்றது என்ற சந்தேகமும் வலுத்து உள்ளது.

புதுடெல்லி, 

 நவம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையில் வங்கி கிளைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு தரவுகளை சேர்த்து வைத்திருக்குமாறு வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுரை வழங்கிஉள்ளது. 

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையை அடுத்து சட்டவிரோத பண மாற்றம் நடந்து உள்ளது. இதனை மத்திய அரசின் விசாரணை முகமைகள் தீவிரமாக கண்காணிக்கிறது. விசாரணை முகமைகள் மேற்கொள்ளும் அதிரடி சோதனையில் கோடி, கோடியாக புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் கணக்கில் வராத பணம் தொடர்ந்து சிக்கிவருகிறது, கைது நடவடிக்கையையும் தொடர்கிறது. இதற்கிடையே வங்கிகளுக்கு மட்டும் அனுப்பப்பட்ட பணம் எப்படி அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் அதிபர்களிடம் குவியும் நிலைக்கு சென்றது என்ற சந்தேகமும் வலுத்து உள்ளது. 

சில வங்கி அதிகாரிகளும் உடைந்தாக செயல்பட்டனரா? என்ற கேள்வியுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வங்கி அதிகாரிகள் கைது செய்யப்படும் சம்பவங்களும் நடந்து வருகிறது.

பெங்களூருவில் சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை சட்ட விரோதமாக மாற்றி கொடுக்க முயன்ற ரிசர்வ் வங்கி அதிகாரியை சிபிஐ கைது செய்து விசாரித்து வருகிறது. பெங்களூருவில் கோடி கணக்கில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கி வருகிறது.

இந்நிலையில்  நவம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையில் வங்கி கிளைகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு தரவுகளை சேர்த்து வைத்திருக்குமாறு வங்கிகளுக்கு ஆர்பிஐ அறிவுரை வழங்கிஉள்ளது. சட்டவிரோதமாக புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கி குவிக்கும் விவகாரம் தொடர்பாக விசாரணை முகமைகளுக்கு ஒருங்கிணைந்த மற்றும் பயனுள்ள நடவடிக்கைக்கு உதவும் வகையில் சிசிடிவி கேமரா பதிவுகளை சேர்த்து வைத்திருக்க வங்கிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது என்று ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தரவுகள் சோதனைக்காக அனைத்து வங்கிகளுக்கும் இந்த அறிவுரையானது வழங்கப்பட்டு உள்ளது என்று ஆர்பிஐ துணை கவர்னர் எஸ் எஸ் முந்த்ரா கூறிஉள்ளார். பெங்களூருவில் ஆர்பிஐ அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அவர் பேசுகையில், குறிப்பிட்ட அதிகாரி ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்றார். ஆர்பிஐ துணை கவர்னர் ஆர் காந்தி பேசுகையில், பொதுமக்கள் பணத்தை குவித்து வைத்திருக்காமல், போதுமான அளவு சுதந்திரமாக பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர் என்றார். 

வழக்காமான முறையில் சிறப்பான பணியினை மேற்கொண்ட வங்கி பணியாளர்களுக்கு ஆர்பிஐ அதிகாரிகள் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர். ஆர்பிஐ தொடர்ந்து பணத்தை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுவரையில் ஆர்பிஐ 4.61 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு உள்ளது. தேவைப்படுமாயின் விசாரணைக்கும் உத்தரவிடப்படும் என்று ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் ஆர்பிஐ அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்கிறது.

Next Story