இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 23-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 Dec 2025 11:40 AM IST
``எதை செய்ய முடியுமோ...’’ - கனிமொழி எம்பி
மக்களுடைய தேவை என்ன என்பதை கேட்டு தெரிந்துகொண்டு, எதையெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் வாக்குறுதியாக தேர்தல் அறிக்கையில் உருவாக்க முடிவு செய்திருக்கிறோம். அதனால் எத்தனை வாக்குறுதிகள் என்ற எண்ணிக்கை என்பதெல்லாம் கணக்கு கிடையாது என கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
- 23 Dec 2025 11:38 AM IST
நாளை தவெகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை, தேனாம்பேட்டையில் செங்கோட்டையன், என்.ஆனந்த் தலைமையில் நாளை தவெக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தல் பணி, பூத் கமிட்டி பணிகள் குறித்து நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 23 Dec 2025 11:36 AM IST
கட்சி கரை வேட்டி அணியாததால் நிர்வாகிகளுக்கு அபராதம்
காஞ்சிபுரம்: உத்திரமேரூரில் நடந்த தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி கரை வேட்டி அணியாமல் வந்த நிர்வாகிகளுக்கு ரூ.200 அபராதம் விதித்தார் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது, இந்த அபராத தொகை மாநில மாநாட்டிற்கு செலவிடப்படும் என கூறினார்.
- 23 Dec 2025 11:33 AM IST
ஓ.பன்னீர் செல்வம் அவசர ஆலோசனை
அடுத்த அரசியல் நகர்வு குறித்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதாரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். சென்னை வந்துள்ள தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சந்திக்க ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- 23 Dec 2025 11:29 AM IST
சென்னையில் பாஜக மாநில மைக்குழு ஆலோசனை
சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் ஆயத்தப்பணிகள் தொடர்பாக கேட்டறிகிறார் பியூஷ் கோயல். சென்னையில் பாஜகவின் மாநில மையக்குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இதில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் பங்கேற்றுள்ளார்.
- 23 Dec 2025 11:23 AM IST
விமானங்கள் இல்லாமல் பயணிகள் அவதி
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளால் தூத்துக்குடி, மதுரை, திருச்சி விமானங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. மேலும் சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லாமல் பயணிகள் அவதி, மேலும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 23 Dec 2025 11:01 AM IST
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகை
பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கிறார் பியூஷ் கோயல். அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்க ஆயத்தம் என கூறப்படுகிறது.
- 23 Dec 2025 9:47 AM IST
செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 6ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.















