காஷ்மீரில் கேபிள் கார் மீது மரம் விழுந்து 7 பேர் பலி ஒருவர் நிலைமை கவலைக்கிடம்


காஷ்மீரில் கேபிள் கார் மீது மரம் விழுந்து 7 பேர் பலி ஒருவர் நிலைமை கவலைக்கிடம்
x
தினத்தந்தி 25 Jun 2017 8:39 PM GMT (Updated: 25 Jun 2017 8:38 PM GMT)

காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு உலகளவில் புகழ்பெற்ற இடம் குல்மார்க். இங்குள்ள தரைதளத்தில் இருந்து பனிச்சறுக்கு செய்வதற்கான

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு உலகளவில் புகழ்பெற்ற இடம் குல்மார்க். இங்குள்ள தரைதளத்தில் இருந்து பனிச்சறுக்கு செய்வதற்கான உயரமான இடமான அப்பர்வாட் என்ற இடத்துக்கு அழைத்துச் செல்ல கேபிள் கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. குல்மார்க் பகுதியில் நேற்று மதியம் பலத்த காற்று வீசியது. அப்போது ஒரு கேபிள் கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

இதில் அந்த கேபிள் காரில் இருந்த 6 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மற்றொருவரின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்களில் 4 பேர் டெல்லியில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் என்றும், மற்றவர்கள் உள்ளூர் பிரமுகர்கள் என்றும் தெரியவந்தது. இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. 1998–ம் ஆண்டு இங்கு கேபிள் கார் இயக்கம் தொடங்கிய பின்னர் நடந்த முதல் விபத்து இது தான்.


Next Story