காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர் சபீர்ஷா திடீர் கைது


காஷ்மீரில்  பிரிவினைவாதத் தலைவர் சபீர்ஷா திடீர் கைது
x
தினத்தந்தி 26 July 2017 11:49 AM IST (Updated: 26 July 2017 11:49 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களில் முக்கியமானவரான சபீர்ஷா நேற்றிரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


புதுடெல்லி,

 காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களில் முக்கியமானவரான சபீர்ஷா நேற்றிரவு அதிரடியாக கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கடந்த 2005-ம் ஆண்டு டெல்லி போலீசார் முகம்மது அஸ்லாம் வாணி என்ற ஹவாலா ஏஜெண்டை கைது செய்தனர். அவனிடம் விசாரித்தபோது அவன் ரூ.2.25 கோடியை காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் சபீர்ஷாவுக்கு பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்தது.

வெளிநாட்டில் தீவிரவாதிகளிடம் இருந்து வந்த அந்த ரூ.2.25 கோடி பண பரிமாற்றம் பற்றி அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இதற்காக விசாரணைக்கு வருமாறு சபீர்ஷாவுக்கு அமலாக்கத் துறை பல தடவை சம்மன் அனுப்பியது.

ஆனால் சபீர்ஷா ஆஜராகவில்லை இதையடுத்து நேற்றிரவு  அமலாக்கத் துறை அதிகாரிகள் பிரிவினைவாத தலைவர் சபீர்ஷாவை கைது செய்தனர்.

ஏற்கனவே கலவரம் நடத்த பணம் வாங்கிய 7 பிரிவினைவாத தலைவர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடதக்கது.

1 More update

Next Story