டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது


டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது
x
தினத்தந்தி 20 Oct 2017 5:01 AM GMT (Updated: 20 Oct 2017 5:01 AM GMT)

பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் டெல்லியில் காற்று மாசு குறைந்ததுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியுள்ளதால் நடப்பாண்டு தீபாவளிக்கு பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால், டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசுகள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

இருப்பினும் அண்டை மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், இன்று காலை டெல்லியில் வழக்கத்தை விட காற்று மாசு அதிகமாக இருந்தது. அதிகாலை வேளையிலேயே  புகை மூட்டமாக காட்சி அளித்தது டெல்லியில் காற்று மாசு அதிகப்பட்டு இருந்ததை காட்டியது.

இருப்பினும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்த தரவுகளின் படி கடந்த ஆண்டை விட தீபாவளிக்கு டெல்லியில் காற்று மாசு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.  தீபாவளியன்று டெல்லியில் கடந்தாண்டு 431 ஆக இருந்த மைக்ரோகிராம் நுண்துகள் இந்தாண்டு 319 ஆக குறைந்துள்ளது. 


Next Story