அடுத்த மாதம் முதல் 500 தொலைவிட ரெயில்களின் வேகம் அதிகரிப்பு பயண நேரம் குறைப்பு


அடுத்த மாதம் முதல் 500 தொலைவிட ரெயில்களின் வேகம் அதிகரிப்பு பயண நேரம் குறைப்பு
x
தினத்தந்தி 20 Oct 2017 11:00 PM GMT (Updated: 20 Oct 2017 9:50 PM GMT)

அடுத்த மாதம் முதல் 500 தொலைவிட ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், அவற்றின் பயண நேரத்தை 2 மணி நேரம் வரை குறைக்கவும் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

புதுடெல்லி,

அதன்படி, பிரபல ரெயில்களின் பயண நேரம் 15 நிமிடங்கள் முதல் 2 மணி நேரம் வரை குறைக்கப்படுகிறது. உதாரணத்துக்கு போபால்–ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் 95 நிமிடம் முன்னதாக போய்ச் சேரும்.

ரெயில்களின் வேகத்தைக்கூட்டி, பயண நேரத்தை குறைக்கிற வகையில் புதிய ரெயில்வே கால அட்டவணை தயாராகி வருகிறது. இந்த கால அட்டவணையில் ஒவ்வொரு ரெயில்வே டிவிசனுக்கும் பராமரிப்பு பணிக்காக 2 முதல் 4 மணி நேரம் ஒதுக்கப்படும்.

50 மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள், ‘சூப்பர் பாஸ்ட்’ என்னும் அதிவேக ரெயில்களாக மாற்றப்படுகின்றன.

ரெயில் நிலையங்களில் ரெயில்களை நிறுத்தி வைக்கிற நேரத்தையும் ரெயில்வே குறைக்கிறது. குறைவான பயணிகள் மட்டுமே ஏறி இறங்குகிற ரெயில் நிலையங்களில் அதிவேக ரெயில்கள் நிற்காது.

இரட்டைப் பாதை, உள்கட்டமைப்பு மேம்பாடு, தானியங்கி சமிக்ஞை முறை, அதிநவீன ரெயில் பெட்டிகள் ஆகியவற்றால் ரெயில்களின் வேகம் மணிக்கு 130 கி.மீ, வேகத்தில் செல்லும் என்று எதிர்பார்ப்பதாக ரெயில்வே மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story