ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டுவர கோரி பிரதமர் மோடியை நாளை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திக்கிறார்


ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டுவர கோரி பிரதமர் மோடியை நாளை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திக்கிறார்
x
தினத்தந்தி 18 Jan 2017 5:42 PM IST (Updated: 18 Jan 2017 5:42 PM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டுவர கோரி பிரதமர் மோடியை நாளை முதல்வர் பன்னீர்செல்வம் சந்திக்கிறார்


சென்னை

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினாவில் இரண்டாவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவு பெருகி வருகிறது. போராட்டக்களத்திற்கு இளைஞர்கள், பெண்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். சென்னையில் முக்கிய பகுதிகளில் கல்லூரி மாணவர்கள், மென்பொருள் தொழில்நுட்ப ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். பீட்டாவிற்கு தடை விதிக்க வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.

சென்னை மெரினாவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்தை கைவிட வேண்டும் எனில் 3 முக்கிய கோரிக்கைகளை இளைஞர்கள் முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து  ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைக்க உள்ளார். இது தொடர்பாக இது குறித்து முதல்வர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். சட்டதிருத்தம் மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.அவசர சட்டத்தினை பிறப்பிக்கும்படி பிரதமரை வலியுறுத்த உள்ளேன்.மாணவர்கள் இளைஞர்களின் போராட்டம் நமது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. என கூறி உள்ளார்.
1 More update

Next Story